< Back
மாநில செய்திகள்
கருணாநிதி சிலை திறப்பு விழா: கோவையில் நேரடி ஒளிபரப்பு
மாநில செய்திகள்

கருணாநிதி சிலை திறப்பு விழா: கோவையில் நேரடி ஒளிபரப்பு

தினத்தந்தி
|
28 May 2022 7:21 PM IST

கோவையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவினை நேரடியாக ஒளிபரப்பட்டதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோவை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போற்றிடும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் அவருடைய உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் சிலையை இன்று மாலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.

இந்த விழாவை கோவையில் உள்ள மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்காக அகன்ற மின்னணு திரை கொண்ட சிறப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிலை திறப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அங்கு வந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்