< Back
மாநில செய்திகள்
ரூ.1½ கோடியில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ரூ.1½ கோடியில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை

தினத்தந்தி
|
1 April 2023 1:24 AM IST

ரூ.1½ கோடியில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை

கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப. தமிழழகன், மாநகராட்சி ஆணையர் பொறுப்பு (லலிதா) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், கும்பகோணம் நாகேஸ்வரன் திருமஞ்சன வீதியில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை அமைப்பது. ரூ.13.98 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட உள்ள கும்பகோணம் ஓடைப்பட்டினம் வாய்க்காலுக்கு கோசி.மணி பெயரை சூட்டுவது, தாராசுரம் பகுதியில் ரூ. 2.37 கோடியில் மண்டல அலுவலகம் கட்டுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக 2023- 24-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்