< Back
மாநில செய்திகள்
கருணாநிதி புகைப்பட கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மாநில செய்திகள்

கருணாநிதி புகைப்பட கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
2 Jun 2023 10:46 AM IST

கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினையையும் முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்