< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடக்கம்
|7 Aug 2022 9:00 AM IST
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த அமைதிப்பேரணியில் மூத்த அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.