திருநெல்வேலி
நெல்லையில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
|நெல்லையில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கட்சி அலுவலகம்
இதையொட்டி நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவகம் போன்று மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில், சபாநாயகர் அப்பாவு, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், மேயர் பி.எம்.சரவணன், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், சட்டத்துறை அரசு அமல்ராஜ் உள்ளிட்டோர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாநகராட்சி அலுவலகம்
நெல்லை மாநராட்சி அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமையில், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மண்டல தலைவர்கள் மகேஸ்வரி, ரேவதி பிரபு மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன்
நெல்லை டவுன் காந்திசிலை அருகே கருணாநிதி உருவப்படத்துக்கு, மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன் தலைமையில் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தச்சநல்லூர் 14-வது வட்ட செயலாளர் ராஜா ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை
திசையன்விளை நேருஜி கலையரங்கம் முன்பு கருணாநிதி உருவப்படத்துக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அனிதா பிரின்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ஐ.ஆர்.ரமேஷ், ராஜசேகர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு கள்ளிகுளம்-விஜயாபதி
தெற்கு கள்ளிகுளத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவைத்தலைவர்கள் சண்முக சுந்தரம், திரவியம், முன்னாள் ஊராட்சி செயலர் சார்லஸ் பெஸ்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜயாபதியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ராதாபுரம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.வளன் அரசு, இடிந்தகரை சகாயபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பணகுடி
ஆவரைகுளம் மற்றும் பணகுடியில் கருணாநிதி உருவப்படத்திற்கு வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாநில மீனவரணி துணை அமைப்பாளர் எரிக் ஜூட், பணகுடி பேரூர் செயலாளர் தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ், ஆவரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.