திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி நினைவு நாள்
|நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது
நெல்லை மாவட்டத்தில் கருணாநிதி நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
கருணாநிதி நினைவு நாள்
நெல்லை மாவட்டம் இட்டமொழியில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி லிங்கேசன், நிர்வாகிகள் தியாகராஜன், ஆறுமுகத்தேவர் மதியரசு, நடராஜன், சுடலை உட்பட பலர் கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நெல்லை டவுனில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் உலகநாதன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி ஒன்றியம்
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாங்குநேரி அரசன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதை நெல்லை கிழக்கு மாவட்ட ்செயலாளர் இரா.ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார். இதில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிரகாம்பெல், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் பரப்பாடி ஞானராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பை
அம்பை யூனியன் வாகைக்குளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், சாட்டுபத்து, வைராவி குளம், தெற்கு பாப்பான்குளம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பரணி சேகர் தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார். வாகைக்குளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி நந்தகுமார், மன்னார்கோவில் பஞ்சாயத்து தலைவர் ஜோதி கல்பனா பூதத்தான், பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம்சங்கர், சாட்டுபத்து பஞ்சாயத்து தலைவர் சாரதா சுப்பிரமணியன், வைராவிகுளம் பஞ்சாயத்து தலைவர் பிச்சம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.