< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
கருணாநிதி நினைவு தினம்
|7 Aug 2022 11:00 PM IST
தேனியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தேனி மாவட்ட வடக்கு ஒன்றியம் சார்பில் ஜங்கால்பட்டியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு ஒன்றிய பொறுப்பாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எம்.சக்கரவர்த்தி தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு..க. கிளைச் செயலாளர்கள் மகாராஜன், ராமதாஸ், திருப்பதி, வேல்முருகன், குமரன் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி, தேனி ஒன்றிய அமைப்பாளர் தளபதி ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.