< Back
மாநில செய்திகள்
மெரினாவில் கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு
மாநில செய்திகள்

மெரினாவில் கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு

தினத்தந்தி
|
21 Feb 2024 3:29 PM IST

கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

ஏற்கனவே நினைவிடம் அமைக்கும் பணி 97 சதவீதம் நிறைவு பெற்று இருந்தது. இதனால் நினைவிடம் திறப்பு விழாவிற்காக முதல்-அமைச்சரிடம் நேரம் கோரப்பட்டிருந்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் கருணாநிதி நினைவிடம் முன்பு மிகப்பெரிய பேனா சிலை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட சாதனைகளை நினைவு கூரும் வகையில் நினைவிட முகப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்