< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவி
|18 Jun 2023 11:28 PM IST
ஆம்பூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
ஆம்பூர் நகரம் ஏ.கஸ்பா பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை க.தேவராஜி, ஆம்பூர் வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன், நகர மன்ற உறுப்பினர் வசந்தராஜ், வார்டு செயலாளர் சவுந்தர்ராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.