கருணாநிதி நூற்றாண்டு விழா: 19ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்-அமைச்சர்
|கருணாநிதி நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, முதல்-அமைச்சர் கழகத் தலைவர் தலைமையில், 19.8.2023, சனிக்கிழமை, காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் - அனைத்து அணிச் செயலாளர்கள் - அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.