தேனி
கருணாநிதி நூற்றாண்டு விழா பட்டிமன்றம்
|தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியகுளம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பட்டிமன்றம் நடைபெற்றது. தலைவர் கலைஞரை காலமெல்லாம் தமிழ்நாடு புகழ்ந்திட பெரிதும் காரணம் சந்தித்த சோதனைகளா?, கலைஞர் சாதித்த சாதனைகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்.எல்.ஏ.வும், பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட அவை தலைவர் பி.டி.செல்லப்பாண்டியன், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ் வரவேற்று பேசினார். இந்த பட்டிமன்றத்துக்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடுவராக இருந்தார். இதில் பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவை தலைவர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.