< Back
மாநில செய்திகள்
செஞ்சியில்  கருணாநிதி பிறந்தநாள் விழா  அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

செஞ்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

தினத்தந்தி
|
3 Jun 2022 5:20 PM GMT

செஞ்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

செஞ்சி,

கருணாநிதி பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா செஞ்சி பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது. விழாவுக்கு செஞ்சி நகர செயலாளர் காஜா நஜீர் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் செஞ்சிக்கோட்ட வனச்சரக அலுவலக வளாகத்திலும், பேரூராட்சி சார்பில் செஞ்சி சந்தை மேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, செஞ்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிரில் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

அன்னதானம்

இதனையடுத்து செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அரங்க. ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட வழக்கறி ஞரணி மணிவண்ணன், நகர அவைத்தலைவர் பார்சு துரை, துணை செயலாளர்கள் சங்கர், ராஜலட்சுமி செயல் மணி, பொருளாளர் நெடுஞ்செழியன், ஜெயா முனுசாமி, அன்புச்செல்வன், மாவட்ட வர்த்தகர் அணி மோகன், தொண்டரணி சோடாபாஷா, போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் செல்வராஜ், நாராயணசாமி, தியாகராஜன், காதர் நவாஸ் உள்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தீவனூர்

மயிலம் அருகே தீவனூரில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான வக்கீல் சேதுநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு ஆயிரம் பேருக்கு அன்னதானமும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. விழாவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்