தென்காசி
கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா
|சுரண்டை அருகே கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடந்தது.
சுரண்டை:
கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுரண்டை அருகே கரையாளனூர், குறிச்சாம்பட்டி, கருவந்தா ஆகிய கிராமங்களில் தி.மு.க. கொடி ஏற்றி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், அரசு ஒப்பந்தகாரர் சண்முகவேல், இளைஞரணி முல்லை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தி.மு.க. கொடி ஏற்றி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்த கரையாளனூரை சேர்ந்த மாணவிக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பால்துரை, பஞ்சாயத்து தலைவர் மகரஜோதி, ஓய்.ஆர்.டி.துரைசாமி, நாகூர்ஹனி, அமானுல்லா, இளைஞர் அணி திருமலை குமார் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் செய்திருந்தார்.