< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி
|18 April 2023 10:51 PM IST
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சென்னை,
கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கி உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அவரது 3 அசையும் சொத்துக்கள் மற்றும் 1 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.