< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்றத்தை பா.ஜனதா தான் முடக்கி வருகிறது-கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தை பா.ஜனதா தான் முடக்கி வருகிறது-கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
20 March 2023 12:11 AM IST

நாடாளுமன்றத்தை பா.ஜனதா தான் முடக்கி வருகிறது என கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

திருவரங்குளம் மண்டல புது சுகாதார செவிலியர் பயிற்சி மையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கும் விழா சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கார்த்திக் சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள். நாடாளுமன்றத்தை பா.ஜனதா தான் முடக்கி வருகிறது. காங்கிரசுக்கு யார் தலைவராக வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். பிளஸ்-2 பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதாதது குறித்து கல்வித்துறை அமைச்சர் உரிய முறையில் விசாரிக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை மாநிலத்துக்கு மாநிலம் இல்லாமல் தேசிய அளவில் தடை செய்ய வேண்டும். பா.ஜனதாவை தோற்கடிக்க தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரசோடு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்