விருதுநகர்
வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
|துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.
தாயில்பட்டி,
துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.
துலுக்கன்குறிச்சி
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இ்ந்த கோவிலில் கார்த்திகையைெயாட்டி நேற்று சிறப்பு யாகம் நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு வாசனை திரவியம், பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் கோவில் வளாகத்தில் முருகன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே உள்ள மூவரைவென்றான் பகுதியில் மொட்டமலையில் குடவரை மலைக்கொழுந்தீஸ்வரா் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மலை உச்சியில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சுழி
திருச்சுழி அருகே உள்ள பாறைகுளம் வெள்ளியம்பலநாதர் கோவில் குன்றின் கார்த்திகை திருநாள் பரணி தீபமேற்றும் விழா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல திருச்சுழியில் திருமேனி நாதர் கோவிலிலும் திருகார்த்திகை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு திருமேனி நாதருக்கும், முருகப்பெருமானுக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.