< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் உற்சவ விழா
|5 July 2022 10:28 PM IST
வடமதுரையில், கற்பக விநாயகர் கோவில் உற்சவ விழா நடந்தது.
வடமதுரை கற்பக விநாயகர், ஏழுமலையான், முத்துமாரியம்மன், மகாகாளியம்மன் கோவில் உற்சவ விழா நடந்தது. கடந்த 3-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மன் கரகம் பாலித்து, மின் ரதத்தில் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை பக்தர்கள் மஞ்சள் நீராடி, முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்து அம்மனை கங்கைக்கு கொண்டு சென்று கரைத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.