< Back
மாநில செய்திகள்
கராத்தே போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை
கரூர்
மாநில செய்திகள்

கராத்தே போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை

தினத்தந்தி
|
31 Aug 2022 10:20 PM IST

கராத்தே போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி திருப்பூரில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள கராத்தே மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், அவர்கள் 12 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளர் சதீஷ்குமாரையும் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்