< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்ற பழ வியாபாரி கைது
|29 Sept 2022 12:15 AM IST
நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்ற பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்ற பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்
அப்போது பையனப்பள்ளி பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த கமல் (வயது 38) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அவர் வீட்டின் பின்புறம் கர்நாடக மாநில 150 மது பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.