நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழா - ரஜினிகாந்த் பங்கேற்பு
|மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.
சென்னை,
நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது. கர்நாடகம் மற்றும் கன்னட மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் கவுரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக ரத்னா விருது அவருக்கு வழங்கப்படுகிறது. வருகிற 1-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கும் விழாவில் தான் பங்கேற்பதாக நடிகர் ரஜினிகாந்த், கர்நாடக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விருது விழாலில் ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா மற்றும் டாக்டர் ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதனிடையே புனித் ராஜ்குமார் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் கடைசியாக நடித்த 'கந்தாட குடி' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் காடு மற்றும் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இயற்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாகும். மேலும் இப்படம் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிறைந்த ஒரு ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.