< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்
|8 Oct 2024 6:24 AM IST
அண்ணாமலையார் கோவிலில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், நதிகளை இணைக்கும் முயற்சிகளை துணிச்சலாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா தொடர்பான கேள்விக்கு, சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் அரசியல் கருத்துகள் கூற முடியாது என்று அவர் பதிலளித்தார்.