< Back
மாநில செய்திகள்
கர்நாடக காங்கிரஸ் இத தான் பண்ணும் - வெற்றி குறித்து சீமான் கருத்து
மாநில செய்திகள்

"கர்நாடக காங்கிரஸ் இத தான் பண்ணும்" - வெற்றி குறித்து சீமான் கருத்து

தினத்தந்தி
|
14 May 2023 9:52 AM IST

கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை,

கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது;

கர்நாடகாவில் இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு மாறுதல் வேண்டும் என்று மக்கள் நினைத்து வாக்கி செலுத்திருக்கலாம்.

யார் வெற்றிபெற்றாலும், நமக்கு எந்த நன்மையில் இருக்கப்போவது கிடையாது. இரு கட்சிகளுமே காவிரி நதிநீர் உரிமையில் நமக்கு எதிராக இருப்பார்கள். மேகதாது அணை விவகாரத்தில் இருவருமே கட்டியே தீருவோம் என்பார்கள். நம்மை பொறுத்தவரையில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான், தோற்றாலும் ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் செய்திகள்