< Back
மாநில செய்திகள்
காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் ஜமாபந்தி
விருதுநகர்
மாநில செய்திகள்

காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் ஜமாபந்தி

தினத்தந்தி
|
26 May 2022 1:24 AM IST

காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

காரியாபட்டி,

காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

காரியாபட்டி

காரியாபட்டி வட்ட அளவிலான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் தனக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு துணை ஆட்சியர் சிவக்குமார் மரக்கன்றுகளை நட்டார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பாளையம்பட்டி, கோபாலபுரம், சூலக்கரை, பாலவநத்தம், சவ்வாஸ்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், பட்டா மாறுதல், ஓய்வூதியம், நிலம் சம்பந்தமான பிரச்சினைகள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், தாசில்தார் அறிவழகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்