< Back
மாநில செய்திகள்
கார்கில் போர் வெற்றி விழாவையொட்டி மினிமாரத்தான் போட்டி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கார்கில் போர் வெற்றி விழாவையொட்டி மினிமாரத்தான் போட்டி

தினத்தந்தி
|
25 July 2022 6:46 PM IST

களம்பூரில் கார்கில் போர் வெற்றி விழாவையொட்டி மினிமாரத்தான் போட்டி

ஆரணி

களம்பூர் வட்டார முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் மற்றும் களம்பூர் அறிவு கோவில் இணைந்து கார்கில் போர் வெற்றி விழாவை முன்னிட்டு களம்பூர் பேரூராட்சியில் 5 கிலோ மீட்டர் கொண்ட மினி மாரத்தான் போட்டி நடந்தது.

சங்கத்தலைவர் சுபேதார் ப.சுப்பிரமணியன் வரவேற்றார்.

மினிமாரத்தானை களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.விநாயகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் களம்பூர் பேரூராட்சி தலைவர் கே.டி.ஆர்.பழனி, ஊர் நாட்டாமை பூபாலன், பேரூராட்சி செயல் அலுவலர் ச.லோகநாதன், துணைத்தலைவர் அகமதுபாஷா, அறிவுக்கோவில் நிர்வாகி வி.முரளி, தலைவர் ஜே.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

முடிவில் சங்க செயலாளர் டி.எம்.சரவணன் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்