< Back
மாநில செய்திகள்
கார்கில் போர் வெற்றி தினம்
தென்காசி
மாநில செய்திகள்

கார்கில் போர் வெற்றி தினம்

தினத்தந்தி
|
27 July 2022 7:43 PM IST

பாவூர்சத்திரத்தில் கார்கில் போர் வெற்றி தினம்

பாவூர்சத்திரம்:

1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் வெற்றி கண்டதை கார்கில் வெற்றி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 23-வது ஆண்டு வெற்றி விழாவையொட்டி பாவூர்சத்திரத்தில் பஸ் நிலையம் அருகில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கேப்டன் சமுத்திரவேல், சுபேதார்கள் சீனிவாசன், அந்தோணிசாமி, சுப்பிரமணியன், செண்பகராமன், தேவேந்திரன், அருள் ஜேசு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்