கார்கில் வெற்றி தினம்; நமது மகத்தான பாரத தேசத்தைக் காக்க இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை வணங்குவோம் - அண்ணாமலை
|கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியை கார்கில் வெற்றி தினம் என்று கொண்டாடி வருகிறோம்.
சென்னை,
கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியை கார்கில் வெற்றி தினம் என்று கொண்டாடி வருகிறோம். இந்த நிலையில், கார்கில் வெற்றி தினத்தில் நமது மகத்தான பாரத தேசத்தைக் காக்க இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை வணங்குவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாது,
இன்று கார்கில் வெற்றி தினம். இப்போரின் போது நமது மகத்தான பாரத தேசத்தைக் காக்க, தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த துணிவுடைய மாவீரர்களை வணங்குவோம்.
இந்த கார்கில் வெற்றி தினத்தில், 'இந்தியா எந்நிலையிலும் தனது இறையாண்மையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் வென்றெடுக்கும்' எனத் தெளிவான செய்தியை அனுப்புகிறது. மேலும் இத்தருணத்தில் நமது எல்லைகளைப் பாதுகாக்க நம் வீரர்கள் செய்யும் தியாகங்களை நினைவுகூர்வோம்.
ஜெய் ஹிந்த்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.