ராமநாதபுரம்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி
|தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் சாலையில் உள்ள ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளியை சேர்ந்த மாணவர்களும் பங்கு பெற்றனர். 5 வயதுக்கு உட்பட்டோருக் கான பிரிவில் மணிகண்டன் கேரளாவிடம் போட்டியிட்டு 3-வது இடத்தையும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் காசிபா உத்தரப்பிரதேசத்துடன் போட்டியிட்டு 2-வது இடத்தையும், இதே பிரிவில் நூருல் அப்பாஸ் பஞ்சாப்பிடம் போட்டியிட்டு 3-வது இடத்தையும், சர்வ சபரி மத்திய பிரதேசத்துடன் போட்டியிட்டு 3-வது இடத்தையும் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முகமது அசிம் புதுடெல்லியுடன் போட்டியிட்டு முதல் பரிசை பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் மன்சூர், செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா, முதல்வர் நிவேதினி, பயிற்சியாளர் அல்நசீமா மற்றும் துணை முதல்வர் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.