< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

தினத்தந்தி
|
11 April 2023 6:55 PM GMT

மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து முனியப்பன் கோவில் செல்லும் சாலையில் உள்ள யுகி ஷிட்டோ-ரியூ கராத்தே பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான கராத்தே பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.கராத்தே பயிற்சியை கராத்தே மாஸ்டர் ரென்சி செந்தில்குமார் தலைமையில் சீனயர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் மாணவ- மாணவிகளுக்கு கட்டா எனும் சண்டை செயல்விளக்கம் காட்டப்பட்டது. கராத்தே பயிற்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்