< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கராத்தே போட்டியில் குளித்தலை மாணவர்கள் சாதனை
கரூர்
மாநில செய்திகள்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் குளித்தலை மாணவர்கள் சாதனை

தினத்தந்தி
|
18 Aug 2022 12:23 AM IST

மாநில அளவிலான கராத்தே போட்டியில் குளித்தலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் மாநில அளவிலான பல்வேறு வயதுக்குட்பட்டோருக்கான கராத்தே போட்டி கடந்த 14-ந் தேதி நடைபெற்றுள்ளது, இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள ஒரு கராத்தே பயிற்சி வகுப்பு சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டா மற்றும் சண்டை பிரிவு போட்டியில் மாணவன் பிரித்திவிராஜன் முதலிடம் பெற்றுள்ளான். சண்டை பிரிவில் தமிழ்குமரன் முதலிடமும், கட்டா பிரிவில் மாணவர்கள் தரணிதரன், சரவணன், கோகுல் ஆகியோர் இரண்டாமிடமும், தரணீஸ், தீபவர்த்தன், சந்தோஷ் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளரான செந்தில்வேலனை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்