< Back
மாநில செய்திகள்
14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கராத்தே மாஸ்டர் - போக்சோ சட்டத்தில் கைது
சென்னை
மாநில செய்திகள்

14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கராத்தே மாஸ்டர் - போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
5 Jan 2023 10:11 AM IST

14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கராத்தே மாஸ்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், 9-ம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகளை காணவில்லை என்று புத்தாண்டு தினத்தன்று ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் கொடுத்தார். மறுநாள் வீட்டுக்கு வந்த மாணவி, பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் நல காப்பக உதவியாளர்கள் மாணவியிடம் பொறுமையாக விசாரணை நடத்தினர். அந்த மாணவி, முகப்பேர் புகழேந்தி சாலையில் உள்ள கராத்தே மாஸ்டர் கருணாநிதி(43) என்பவரிடம் கடந்த 6 மாதமாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். அப்போது கருணாநிதி, மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கராத்தே மாஸ்டர் கருணாநிதியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த மாணவிக்கு மேலும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்