< Back
மாநில செய்திகள்
கிராம சபை கூட்டத்தில் காரசார விவாதம்
விருதுநகர்
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் காரசார விவாதம்

தினத்தந்தி
|
16 Aug 2022 12:38 AM IST

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

பஞ்சாயத்து

சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழா நிகழ்ச்சியில் தலைவர் லீலாவதி சுப்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜம்மாள், விஜயலட்சுமி, மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் அருள் செய்திருந்தார்.

விஸ்வநத்தம்

விஸ்வநத்தம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் நாகேந்திரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செல்வம் செய்திருந்தார். அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் கவிதாபாண்டியராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் புஷ்பவேணி, செயலர் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரசார விவாதம்

சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவின் போது தலைவர் கருப்பசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் மாரியப்பன், பஞ்சாயத்து செயலர் கனகமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் போது செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியை அருகில் உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து நிர்வாகம் சொந்தம் கொண்டாடி வருவதாக சிலர் புகார் தெரிவித்து காரசார விவாதம் செய்தனர். பள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் உசிலை செல்வம் கலந்து கொண்டு பஞ்சாயத்து பகுதியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு கூறி பாராட்டு பெற்றார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலாளர் லட்சுமண பெருமாள் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்