< Back
மாநில செய்திகள்
காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி இல்ல திருமண விழா
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி இல்ல திருமண விழா

தினத்தந்தி
|
11 Feb 2023 12:25 AM IST

காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நடத்தி வைத்தார்.

காரைக்குடி,

காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நடத்தி வைத்தார்.

மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமணம்

காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி-தேவிமாங்குடி ஆகியோரின் மகள் பொறியியல் பட்டதாரி மதுமிதாவிற்கும், காரைக்குடி அருகே கோட்டையூர் குமார்-ஜெயந்திகொப்பாத்தாள் ஆகியோரின் மகன் பொறியியல் பட்டதாரி மெய்யப்பன் ஆகியோருக்கு காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவிற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், எம்.பி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்தன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், பேரூராட்சி தலைவர்கள் கார்த்திக்சோலை, ராதிகா, தி.மு.க மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செட்டிநாடு பாலு, புதுவயல் சுப்பிரமணியன், காரைக்குடி நகர் மன்ற உறுப்பினரும், ம.தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பசும்பொன் மனோகரன், பிரிட்டிஷ் பேக்கரி தயாரிப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் பாட்ஷா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் கவிஞர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகர் தலைவர் சஞ்சய், சக்கந்தி ஊராட்சி முத்துராமலிங்கம், தேவகோட்டை வட்டார காங்கிரஸ் கட்சி இளங்குடி முத்துக்குமார் மற்றும் அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், டாக்டர்கள் மற்றும் அனைத்து சமூக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை மாங்குடி, எம்.எல்.ஏ-தேவிமாங்குடி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்