தூத்துக்குடி
கரடிகுளம் சின்னகாலனியில்புதிய டிரான்ஸ்பார்மரை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
|கரடிகுளம் சின்னகாலனியில் புதிய டிரான்ஸ்பார்மரை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனி பகுதியில் மின்வாரியம் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். இந்த. நிகழ்ச்சியில் அ.திமு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் காளிமுத்து, உதவி செயற் பொறியாளர் மெகாவேல், கழுகுமலை உதவி மின் பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி, கோவில்பட்டி அம்பாள் நகர், ராஜீவ் நகர் 6-வது தெரு, பூரணம்மாள் காலனி, கரடிகுளம் சி.ஆர். காலனி, கயத்தார் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பர்மர்களையும் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.