< Back
மாநில செய்திகள்
கப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
12 Aug 2022 6:26 PM GMT

கப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

முத்துமாரியம்மன் கோவில்

விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடந்தது.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், கிராமத்தில் உள்ள மாடவீதிகள் வழியாக பக்தர்களின் வெள்ளத்தில் ஆடிஅசைந்தபடி வந்து பின்னர் கோவிலை வந்தடைந்தது.

சாமி தரிசனம்

அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்