< Back
மாநில செய்திகள்
வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
27 May 2023 6:45 PM GMT

திருக்களப்பூர் கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் திருக்களப்பூர் கிராமத்தில். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் தலைமையில் தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பம் செல்வமணி முன்னிலை வகித்தார். முகாமில் காது-மூக்கு-தொண்டை, இருதய நோய்கள், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சித்தா யோகா ஹோமியோபதி ஆகிய பரிசோதனைகள் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் கண், கிட்னி, இருதயம் போன்ற பரிசோதனைகளில் மேல்சிகிச்சைக்காக 43 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவ பயணாளிகளுக்கு மருந்தகள், மாணவர்களுக்கான கண்ணொளி திட்டத்தில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர். முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முகாமில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, ஆண்டிமடம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாபன், திருக்களப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி, ஊராட்சி செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பகுதிநேர செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள், மருந்தாளுநர்கள் ஆய்வக நுட்புனர், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் செய்திகள்