சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்வு: முதல்-அமைச்சர் வாழ்த்து
|சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு வாழ்த்து தெரிவித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
'சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்களுக்கு வாழ்த்துகள்.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
நீதியையும் இந்திய மக்கள் மிகவும் போற்றும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கபில் சிபல் அவர்களது தலைமை அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.