< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
|23 May 2022 1:22 AM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
கன்னியாகுமரி,
விவேகானந்த கேந்திராவின் பொன்விழாவையொட்டி, விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், 1,008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நேற்று நடந்தது.
இதையொட்டி மாலையில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சன்னதி தெரு வழியாக பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு மாலை 5.30 மணிக்கு பஜனையும், அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் 1,008 திருவிளக்கு ஏற்றி பூஜை நடத்தினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.