கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மேற்கூரையின்றி காணப்படும் பிளாட்பாரத்தால் பயணிகள் அவதி
|பிளாட்பாரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மேற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரெயில் மூலமாகவே வந்து சொல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை, பெங்களூரு, ஹிம்சாகர், ஹவுரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இந்தியாவில் மேம்படுத்தப்பட உள்ள ரெயில் நிலையங்களில் ஒன்றாக கன்னியாகுமரி ரெயில் நிலையம் தேர்வாகி உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.67 கோடி செலவில் நவீன மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம் போல் வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது மேற்கூரையும் போடப்பட்டுள்ளது ஆனால் ஏற்கெனவே உள்ள பிளாட்பாரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மேற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் பயணிகள் மத்தியில் நாய்கள் அங்கு இங்கும் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் நாய் ள் பயணிகளை கடிக்க துரத்துவதை காண முடிகிறது.
எனவே ரெயில்வே நிர்வாகம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைத்து மழை மற்றும் வெயில் பாதிப்பில்இருந்து பயணிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் நாய்தொல்லை களையும் அடியோடு அகற்றி பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.