< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி-கொல்லம் மெமூ ரெயில் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

கன்னியாகுமரி-கொல்லம் மெமூ ரெயில் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Oct 2022 6:30 PM IST

அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவனந்தபுரம் சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்புப் பிரிவில் உள்ள நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகளுக்காக, அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில் எண்: 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும். ரெயில் எண்: 06773 கன்னியாகுமரி- கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

ரெயில் எண்: 16366 நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அன்று 2.30 மணிக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

ரெயில் எண்: 06429 கொச்சுவேளி- நாகர்கோவில் சந்திப்பு முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் கொச்சுவேளியில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கொச்சுவேளியில் இருந்து 3.10 மணிக்கு(1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

இவ்வாறு செய்தி கூறியிருப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்