சிவகங்கை
அரசு சார்பில் இன்று நடக்கிறது கண்ணதாசன் பிறந்தநாள் விழா
|கண்ணதாசன் பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று நடக்கிறது
காரைக்குடி
கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் பிறந்த நாள் விழா இன்று(சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்குகிறார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அனைத்து கட்சியினர், சமூகநல ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும் இன்று காலை 10 மணிக்கு கண்ணதாசனின் கவிதைகளின் சிறப்புக்கு பெரிதும் காரணம் அவர் பார்த்ததும் பட்டதுமா? கற்பனையும் கனவுகளுமா? என்ற தலைப்பில் நடுவர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.