திருப்பூர்
காங்கயம் நகராட்சி கூட்டம்
|காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நேற்று காலை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
காங்கயம்
காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நேற்று காலை நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பழையகோட்டை சாலை, கரூர் சாலை, திருப்பூர் சாலை, வாய்க்கால்மேடு, மூர்த்திரெட்டிபாளையம், குதிரைப்பள்ளம்சாலை, அகிலாண்டபுரம், கோட்டைமேடு, கார்த்திகைநகர், பாரதியார் வீதி, காந்திநகர், உடையார்காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் அதனை சரி செய்யும் பணியை மேற்கொள்வது, குடிநீர் மின் மோட்டார் இயங்காமல் பழுது ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைபடுவதால் அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் கமலவேணி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.