< Back
மாநில செய்திகள்
கஞ்சி கலய ஊர்வலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கஞ்சி கலய ஊர்வலம்

தினத்தந்தி
|
12 Sept 2022 1:09 AM IST

கஞ்சி கலய ஊர்வலம்

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர கஞ்சி கலயவிழா நேற்று நடைபெற்றது. மன்ற வளாகத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க வட்டத்தலைவர் இளவரசன் கொடியை ஏற்றி வைத்தார். மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார். கஞ்சி கலய ஊர்வலத்தை தஞ்சை மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினசாமி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தவாறு ஓம் சக்தியே ஆதிபராசக்தியே என்ற முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து மன்றத்தை அடைந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்