< Back
மாநில செய்திகள்
கனியாமூர் தனியார் பள்ளியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்...!
மாநில செய்திகள்

கனியாமூர் தனியார் பள்ளியில் 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்...!

தினத்தந்தி
|
11 Jan 2023 10:27 AM IST

கனியாமூர் தனியார் பள்ளியில் 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.

சென்னை,

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க கோரி பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு ஐகோர்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது கனியாமூர் தனியார் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் எல்.கே.ஜி. முதல் 4-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் தொடங்கியது. 182 நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியின் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்