< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
16 Oct 2022 7:41 PM IST

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி 30-ந்தேதியும், திருக்கல்யாண வைபவம் 31-ந்தேதியும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கந்தசஷ்டி விழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கான பாதைகள், மேடை, பந்தல் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கேற்றவாறு அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்