< Back
மாநில செய்திகள்
கண்டமனூர், மேலபட்டி  அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

கண்டமனூர், மேலபட்டி அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
27 Sept 2022 7:16 PM IST

கண்டமனூர், மேலபட்டி அரசு பள்ளிகளில் கலெக்டா் ஆய்வு செய்தார்.

கடமலைக்குண்டு கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த தொகுப்பு வீடுகளை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் இன்று ஆய்வு செய்தார். அப்போது பழங்குடியின மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து மேலபட்டியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயகூடத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கண்டமனூர், மேலப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து பள்ளி குழந்தைகளிடம் கேட்டறிந்தார். மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்பு திறன் குறித்து பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து, அய்யப்பன், கடமலைக்குண்டு ஊராட்சி தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் துரைப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்