< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
22 March 2023 3:32 PM IST

காஞ்சீபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுமுதல் நாள்தோறும் காலை, இரவு என இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் யதோக்தகாரி பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அந்த வகையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், சிறப்பு ராஜ அலங்காரத்தில் பெருமாள் உற்சவர் எழுந்தருளினார். பிறகு தேரானது திருகச்சி நம்பி தெரு, செட்டித்தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோவில் வரை சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

வழிநெடுக்கிலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கற்பூரம் தீபாராதனைகள் காண்பித்து பக்தி கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்