< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா
|6 Feb 2023 1:34 PM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது.
உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்பக் குளத்தில் ஆண்டுதோறும், தை மாத பவுர்ணமியன்று தெப்பத்திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. கோவில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி, வரதராஜ பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் ஆராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.