காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் தும்பவனத்தம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசமானது; நிர்வாக பொறுப்பை ஏற்றது அறங்காவலர் குழு
|காஞ்சீபுரம் தும்பவனத்தம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசமானது, நிர்வாக பொறுப்பை ஏற்றது அறங்காவலர் குழு.
கோவில் நகரமான காஞ்சீபுரம் மாநகரில், சின்ன காஞ்சீபுரம் பகுதியில் தும்பவனம் கிராமத்தில் அமைந்து உள்ளது தும்பவனத்தம்மன் கோவில். இந்த கோவிலில் பரம்பரை பரம்பரையாக ஊர் கிராமத்தார் கட்டுப்பாட்டில் நிர்வகித்து வந்து ஆகம விதிப்படி தினமும் அபிஷேகங்கள் பூஜைகளும் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், கோதண்டம் என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அவர் பதவி காலம் முடிந்து சென்று விட்டதால் தும்பவனம் பகுதியை சேர்ந்த குணசீலன் என்பவர் தனது கட்டுப்பாட்டில் கோவிலை வைத்து பராமரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவ்வகையில் இத்திருக்கோயிலுக்கு நிர்வாக அறங்காவலர்களாக விமல்தாஸ், விஜயலட்சுமி மற்றும் சண்முகம் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி போலீசார் உதவியுடன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்நிலையில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவிடம் கோவில் பொருட்கலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், வேலரசு, சுரேஷ், ஆய்வாளர்கள் பிரித்திகா, அலமேலு மற்றும் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துளசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.