< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம்: ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை; ம.தி.மு.க. பிரமுகரிடம் விசாரணை
மாநில செய்திகள்

காஞ்சீபுரம்: ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை; ம.தி.மு.க. பிரமுகரிடம் விசாரணை

தினத்தந்தி
|
27 Aug 2024 6:47 PM IST

காஞ்சீபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரணம் அடைந்த வழக்கு, முதலில் சந்தேக மரணம் என போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் காலாண்டர் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி. காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பெண் காவல் ஆய்வாளர் மரணம் அடைந்த வழக்கு, பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டது. இதில், ம.தி.மு.க.வை சேர்ந்த காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் சந்தேகத்திற்குரிய மற்றொரு நபர் என இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்