< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து
|11 May 2023 3:01 PM IST
காஞ்சீபுரம் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் காஞ்சீபுரம் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.
கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மீண்டும் பாலாற்றில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.